Thursday, September 11, 2014

பார்ப்பன அனைத்தும் அரசியலாம் !!

கருவரை அரியாசனம் தொடங்கி , கல்லறையில் கரையும் வரை அரசியலின் சுவடுகள் .இரு உயிர் ஓருயிராய் மாறுகையில் பாலின சர்ச்சை , ஒரு பாலருக்கோ பாலியல் பிரச்சனை .கோடி மக்களின் வாழ்வியல் திருத்தங்கள் ஏற்பட தலைவனாய் மாறுகிறோம் , நமக்குள் வரும் மனத்தாங்கலை மட்டும் ஊரிடம் சென்று மன்றாடுகிறோம் .மேடை முகமூடியில் முகநகை உதிர்பவனை ரோஷத்துடன் அரசியல் குற்றவாளி என்று அழைக்கின்றோம் , நாளும் முகநக மட்டும் நண்பனாய் இருபவனிடம் வெட்கமின்றி ஏமாளியாய் கூழ் குடிகின்றோம் .தனக்கென வருபவள் தோழியாய் , அவனுக்கென வந்தால் அவள் ஆவாள் காதலியாய் ! நாம் எழுதுகையில் மட்டும் கிசுகிசுக்கள் அடுத்தவரின் Biography அந்தஸ்து பெறும் . சர்வதிகாரம் இன்றி குடிகள் அனைவரும் சமமாய் இயற்ற வேண்டிய அழகிய அரசியல் காவியத்தின் இன்றைய நிலை 'குழாயடி சண்டையில் ' !  எனக்கு  இருக்கும் கருத்து வேறுபாடு , என் கையாலகாததனம் , மற்றவரை பற்றி பெருமையாய் புறம் பேசுதல் , அடுத்தவர்களுக்கு மட்டும் வரும் குறைகள் என நம் குறைபாடுகளுக்கு நாம் கூறிக்கொள்ளும் எழுத படாத விதி 'அரசியல்' ! தன குடும்ப வழக்குக்கு அரசியல் என பெயரிட்டு ,இங்கு இல்வாழ்கை காணும் (இந்த ) அரசியல்வாதிகள் கூறுவது போல் (இவர்கள்) அரசியல் ஒரு சாக்கடை தான்  !


Tuesday, May 20, 2014

தீவிரவாதம்

பல நேரம் குறிஞ்சி மலரும்
  முள்செடியில் மறைவதுண்டு !
பாதையில் இருக்கும் புதரை வெட்டாமல்
  வேறு பாதை எடுத்து செல்கிறோம் ,
வளரும் போது அது நம்மை காயப்படுத்தினால்
   திரும்பி பார்க்கிறோம் !
வெளி வர துடிக்கும் குறிஞ்சி மலரின்
    குரல் மறுக்கப்படுவதினால் ,
முட்களின் மிரட்டல்
   நமக்குள் தீவிரவாதமாய் !!


கலியாண தேனிலா

பூப்படைந்த மகளின்  
  கோலத்திலிருந்து  நான்
    கலைவதற்கு முன்பே ,
நாளை காலை மணமகளாய்
    புதுக்கோலம் ,
 நீர்கோலமாய் போய்விடுமோ
   என் மனகோலம் !

இரவு பந்தியில் உப்பு கம்மி என்ற
      கவலை என் வீட்டாருக்கு ,
இனி வரும் அந்தியும் எப்படி போகும்
     என்ற பயம் எனக்கு !

அவன் (நாளை முதல் தானே அவர் ),
அவன் , நிறம் பற்றி தெரியவில்லை ,
    குணம் பற்றியோ யாரும் சொல்லவில்லை !

மணமகளாய் அனுப்ப என் வீட்டார் துணிந்துவிட்டனர் ,
  மகளாய் ஏற்றுக்கொள்ள அவன் வீட்டார் விரும்பிவிட்டனரோ ?

என் பாதையில் துணைவனாய் துணை வருவானா ,
 கணவனாய் கல்போல் நிற்பானோ ?

7-மணிக்கு முன் இங்கு சூரியன் எழும்பியதில்லை ,
 இனி 5-மணிக்கு அவனை எழுப்புவதில் எனக்கு கஷ்டமில்லை ,
என் பயமோ,
  அங்கு சூரியன் கண்களை மூட இடம் தருவரோ ?

இன்று தெரிகிறது ,
ஏன்,
 என் அன்னையும் என்னை மகனாய் கேட்டாள் என்று !


அம்மாவின் வியர்வை துளிகள்

முதல் முறை என் மேல் விழுந்த துளியை ,
  என்னை பூமிக்கு அனுப்பியதில்
    ஆண்டவன் விட்ட ஆனந்த கண்ணீர் என நினைத்தேன் ,

நடுநிசியில் விழித்து எழுந்து அழுது முடித்து ,
   விடியற்காலையில் கண்ணுறங்கும் போது நனைத்தது ,
     என்னை குளிர்விக்க வானம் தந்த பனித்துளி என குதித்தேன் ,

சுரத்தில் தூங்கும் போது உரசியது
   இன்னும் நிற்காத மழையென நடுங்கினேன் ,

இளம் வயதில்,
  ஊர் பெயர் தெரியாத பலரை உலகமென நினைத்து ,
    கட்டாத கட்டிடம் உடைந்தது என நிற்கும் போதும் ,
      என் மேல் காய்ந்தது ,
   உப்பு சப்பற்ற என் கண்ணீர் என ஏமாந்தேன் !

இறுதியில் ,
   என் குழந்தையை கொஞ்சுகயிலும் ,
   குழந்தை உறங்கும் வரை உறங்காமல் இருந்த களைபினிலும் ,
   சுரதினில் மழலை உறங்கையில்
      வருணனை திட்டி கொண்டு அனுதினமும் அவனுடன் அமர்கையிலும் ,
   இளம் வயதில் உப்பு சற்ற கண்ணீர் அவனை வதைகயிலும் ,

உணர்ந்தேன் ,
 என் ஏமாற்றத்தை ,
  என் விழுந்த அத்தனையும் ,
   என் அம்மாவின் வியர்வை துளி என !!




இளமை ஒரு சாக்கடை !

பருவம் தொடங்கும் முன் பரவசம் ,
 தெளிந்த பிறகே வாழ்கை நம் வசம் !
கடையை பார்க்கையில் 50 பைசா ஆசை மிட்டாய் வாங்கியது 
           அன்றைய ஆசை மனது மனது !
மதுவும் , மாதுவும் இன்றி வேறேதும் தேடாது 
           இன்று வாழும் போதை மனது !
சப்பு சாமான்களுடன் கனவு இல்லத்தில்  வாழ்ந்தது 
         அன்றைய கபடமற்ற மனது !
Whatsapp  -லும், Facebbok -லும் விரல் விந்தையென விரக்தியை  அழைத்தது 
          இன்றைய காளை மனது !
நிலா என்பது பாட்டி கதைக்கு காத்திருந்தது 
         அன்றைய கிள்ளை மனது,
இரவையே தொலைத்தது வாழும் கிளர்ச்சி மனது !
காதல் என்பதும் அம்மாவின் பாசம் என்றது 
         அன்றைய பிள்ளை மனது ,
நட்பு கூட மோகத்தின் வாயில் அகப்பட்டது 
         வாழும் நம் இளமை வயதில் !
குப்பை மேல் குப்பை சேர்ப்பதில் அர்த்தமில்லை ,
இதன் காரணமே இளமை அரசியல் நாம் காணவில்லை !! 


Saturday, January 5, 2013

வாழ்க சுதந்திர பாரதம் !!!!!

   வெடித்து  விழும் உடல் துண்டுகளில் ,
       விலை வாசி ஏற்றத்தினால் ,
           தங்கம்  மட்டுமே  கண்ணுக்கு  தெரிய ,
  ஒரே  குண்டில்  பக்கத்து  தெருவே 
            அடியோடு  புகையாக ,
   பற்றி எறிவது நம் Scooter இல்லை 
              Govt  Bus தான் என்று பலர் பெருமூச்சு விட ,
 "கப்பலேறி  போயாச்சு ,
      சுத்தமான நாடாச்சு ",
       - எங்கேயோ  S.P.B .இன்  குரல் கேட்க ,
எனக்கோ ,
   என்  சாம்பாருக்கு தேவை கொத்தமல்லி !
அவன்  அவனுக்கு 
    அவனவன்  கஷ்டம் !!!
வாழ்க சுதந்திர பாரதம் !!!!!

Monday, November 28, 2011

நனையாத ஈரங்கள் !!!

கருவின் உரு கைகளில் தவழுகையில் ,


காகித கப்பல் கரை சேர்கையில் ,


பட படக்கும் பட்டாம்பூச்சி உள்ளங்கையினுள் துடி துடிக்கையில் ,


எதிர்பாராத விடுமுறைகளில் ,


மொட்டை மாடி நிலவில் அன்னை மடி தொழுகையில் ,


பிடிக்காத விவாதமும் பிடித்தவர்களிடம் விவாதிக்கையில் ,


எதிர்பார்க்கும் தருணமும் எதிர்பாராமல் நிகழ்கையில் ,


மழையில் நனைந்து கண்ணீர் கலந்து நடக்கையிலும்


துடைத்து விடும் கைகளுடனும் ,


உவமையில்லா உவகையின் கிறுக்கல்கள் !!!!